உன் பகல் நேர பொழுதுகளையெல்லாம் என் கண்கள்
படம் பிடித்து தான் குறும்படமாய் காண்பிக்கிறது என் மனது.
இரவில் உறங்கும் முன்…..
எங்கேயாவது உன் பெயரை பார்த்தாலோ, கேட்டாலோ,
என் மனத்திரையில் உன் படங்கள், உறையும் காட்சிகளாய்…
விளம்பரதாரர் நிகழ்ச்சிகள் போல தான் இப்போதெல்லாம்
என் கனவுகள், இடைவேளை இன்றி தொகுத்து வழங்கப்படுகிறது
என் மனதால்…….
நீ எங்கே என்று நாலாபுறமும் நோட்டம் விட்டு
உன் கண்களை கண்டுபிடித்து தான்,
இன்றைய செய்திகளை வாசிக்கிறது என் கண்கள்….
இருந்தும் அடுத்த கட்டத்துக்குள் நுழையாமலே,
நம் பார்வை பரிவர்த்தனைகள் ஒரு குடும்ப நெடுந்தொடர்
போல தான் தொடர்கிறது என்றுமே அந்நாளின் இறுதியில்…..
Tags: $-Siru-kavithai-%-A-True-Love-Kathal-Kavithai-Kavithai-, a-true-love-kathal-kavithai-kavithai-love-tamil-kavitha, கவிதை, காதல்-கவிதை, தமிழ்-கவிதை, kadhal, kadhal-kavithai, kavithai, love, love-poem, tamil kathal kavithai, Tamil-Poem

