kuruvi-my view

12 May

உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில், தரணி இயக்கத்தில், விஜய், த்ரிஷா, விவேக் மற்றும் பலர் நடித்து வெளிவந்திருக்கும் படம் ‘குருவி’. கதைச் சுருக்கம். கோட்ச்சா என்கிற மலேசிய வில்லன் ஆந்திர மாநிலம் கடப்பா கல் குவாரியில் சட்டத்துக்கு புறம்பாக வைரம் வெட்டி கடத்துகிறான். இதைத் தட்டிக் கேட்ட மணிவன்னனையும் அவரது ஆட்களையும் அடிமைகளாக்கிக் கொடுமைச் செய்கின்றனர். இறுதியில் வழக்கம் போல நம் தளபதி எல்லாரையும் அடித்து துவைத்து, தன் மக்களைக் காப்பாற்றுகிறார்.

வழக்கமான விஜய் படமாகவே இந்த படமும் ஆரம்பமாகிறது. வழக்கமான பன்ச் டயலாக்குகள். வழக்கமாக ஒரு இன்ட்ரொ, பாட்டு, சன்டை. ஆனால் இதில் கொஞ்சம் காலம் தாழ்த்தி மலேசியாவில் தான் முதல் சன்டை நடக்கிறது. படம் விஜய்யின் ரேஸ் காட்சியிலிருந்து ஆரம்பமாகிறது. இந்த காட்சி திருமலை படத்தில் விஜய் பைக் ஓட்டும் காட்சியை நினைவுபடுத்தினாலும், விஜய் இந்த படத்தில் வித்தியாசமாக கார் ஓட்டியிருக்கிறார். காரின் பாகங்களனைத்தும் தனியே பிய்த்து கொண்டு போனாலும் காரை நம்பிக்கையோடு ஓட்டுகிறார், ஜெயிக்கிறார். அவர் கார் ஓட்டிய மாதிரி யாருமே இதுவரை ஓட்டியிருக்க மாட்டார்கள், இனிமேலும் ஓட்டவும் முடியாது….(என்ன ஒரு அறிவாளித்த்னம்)

கார் ரேஸ் முடித்த கையோடு ஒரு பாட்டு மாளவிகாவோடு. அப்புறம், படத்தில் விஜய் அப்பா மணிவன்னன் வாங்கிய கடனுக்காக வீடு ஜப்தியாக போகும் போது கதை சூடு பிடிக்கிறது (எங்களுக்கும் தான்). தன் அப்பாவிற்கு வந்த பவுன்சான ஐம்பது லட்ச ரூபாய் செக்கை எடுத்துக் கொண்டு வீட்டை மீட்க மலேசியா செல்ல திட்டமிடுகிறார். விஜய்யும், விவேக்கும் குருவியாக மலேசியா செல்கின்றனர். படத்தில் மலேசியாவில் நம்ப முடியாத காட்சிகள் பல இடம் பெறுகின்றன. ஒன்றா, இரண்டா பூச்சுற்றல்கள், அதில் ஒன்று வைரத்தைத் திருடி விட்டு கல்கண்டு வைப்பது,(நமக்கும் தான்).

இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்ப் போல் ஒரு சாகஸக் காட்சி விஜய்யும், த்ரிஷாவும் பல மாடிக்கட்டிடத்தில் கயிற்றில், தொங்குவது த்ரிஷா குளத்தில் விழுவது(எப்படியெல்லாம் ஏமாத்தறாங்க). படத்தில் அங்கங்கே இரட்டை அர்த்த வசனங்கள் அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.(உஸ்ஸ்ஸ் அப்பா)

பிறகு அந்த வைரத்தை த்ரிஷாவின் பையிலே வைத்து இந்தியாவிற்குக் கொண்டு வரும் விஜய்யின் அறிவு நம்மை அதிற வைக்கிறது. கோட்ச்சா(வில்லன்-சுமண்) த்ரிஷாவினுடய அண்னன் மலேசியாவின் பாட்ஷா என்று ஒரு அறிமுகம் கொடுத்து விட்டு அவரை வீல்ச்சேரில் உட்கார வைத்து விட்டனர்(பாவம்! யாருப் பெத்த பிள்ளையோ!).

பாடல்கள் ஒவ்வொன்றும் படத்துக்கு சம்பந்தமே இல்லாமல் தனியே ஒட்டாமல் செல்கின்றன. தேன் தேன் என்று தொடங்கும் பாடல் தேன் தான். மற்ற பாடல்கள் நலம். காமெடி பின் பாதி படத்தில் இல்லை. படம் சீரியஸாக நகர்கிறது.(அழக் கூடாது)

அங்கங்கே படத்தின் காட்சிகள், கில்லியை நினைவுபடுத்துகிறது…விஜய் செய்யும் நக்கல்கள் எல்லாமே ரசிக்கும் ரகம். அப்புறம் படத்தில், நிறைய வில்லன்களை(கோட்ச்சா, கொண்டா ரெட்டி) அடித்திருக்கிறார் விஜய். நன்றாக ஆடியிருக்கிறார் (மொழ மொழனு).  நிறைய தாவியிருக்கிறார்(செவலை தாவுடா தாவு….) ஸாரி பறந்திருக்கிறார். அதிலும் இடைவேளைக்கு முன்னர் ஒரு ஜம்ப் அடிப்பாரே (குருவி அடிச்சா.. குருவி பறந்தா…விசில்) என்ன ஒரு ஜம்ப் (ஸ்பைடர் மேன் கூட கையில் சிலந்தி வலை வச்சுத்தான் தாவுவார்). ரசிகர்களின் வேண்டுகோளுக்கினங்க ஸ்பைடர்மேன்+பேட்மேன்+ஹீமேன்=ஆல் இன் ஆல் அழகுமேன்=விஜய்(வேணாங்கனா விட்ருங்கனா…). நாசர் கடைசியில் கெளரவத் தோற்றத்தில் வருகிறார்.

மொத்தத்தில் குருவி- சரியாக எடுக்கப்படாத கில்லியின் ஜெராக்ஸ்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: