தமிழ்! தமிழ்!

15 Jul

நீங்கள் தமிழனா?

 தமிழ், தமிழ் என்று சொல்லும்போது தேன் வந்து பாய்கிறதா?

 அப்போது நீங்கள் தமிழன் தான்…. நான் இங்க தமிழன்னா இப்படி இருக்கனும், அப்படி இருக்கனும்னு சொல்ல போறதில்ல… ஹி..ஹி…. அதத்தான், இங்க எத்தனையோ பேர் சொல்லிட்டாங்களே! அது உங்களுக்கே தெரியும்ல என்ன?

 நான் இங்க சொல்ல வர்றது என்னனா, ஒரு சின்ன விஷயம்… ஒரு உரைகல் வைக்கிறேன்…. நீங்கள் பத்தரை மாற்று தமிழனா?
இல்லை கொஞ்சூண்டு குறைகிறதா?
உரசிப் பார்த்துடுங்க…

தினசரி எத்தனை ஆங்கில சொல் பேசறிங்க….

 இப்டிலாம் கேட்டா என்னை நேர்ல வந்து அடிங்க…

1.ஆனா, தினமும் எத்தனை தமிழ் சொற்கள் புதுசா கத்துக்குறிங்க? (இப்படி கேக்கலாம்ல, இப்ப என்ன செய்வீங்க? இப்ப என்ன செய்வீங்க?).

2.எத்தனை புத்தகம் தமிழ்ல இதுவரைக்கும் படிச்சிருக்கிங்க?

3.எத்தனை தமிழ் புத்தகங்கள் உங்கள் புத்தக அலமாரியை அலங்கரிக்குது?

4.எத்தனை குறள் இருக்குது, அதுல ஒரு குறளையாவது படிச்சு கடைப்பிடிக்கிறிங்களா?

5.தும்மல், விக்கல் வந்தா கூட வீட்ல எஸ் சூஸ் மீனு சொல்றீங்களா?

6.மற்றவர்கள் தூய தமிழில் வினவும்போது உங்களுக்கு ஒரே சிரிப்பு சிரிப்பாக வருகிறதா?

இதெல்லாம் நீங்கள் கடைப்பிடிக்கிறீர்களா!
கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் அய்யா!

சிந்தித்து பார்த்து கொள்கையை மாத்து,
சிறுசா இருக்கையில் திருத்திக்கோ…..  

என்று போகும் பட்டுக்கோட்டையாரின் வரிகளை போல்…
நானும் என் தவறு சிறுசா இருக்கும்போதே திருத்திக்க போறேன்…
அப்ப நீங்க….

(இதை விட பண்பலையில் ஒரு அலைவரிசையில், ___டிக்சனரி என்று ஒரு நிகழ்ச்சி, ச்சே ச்சே பலே பலே அதில் என்னன்ன தமிழ் வார்த்தைகள் புதிது புதிதாக கண்டுபிடித்து மக்களுக்கு எடுத்துரைக்கிறார்கள். வளர்க அவர்கள் தொண்டு!) பண்பலை அன்னாத்தைகளா, உங்களைத் தான், என்னன்னா எவ்வளவோ பண்ணிட்டீங்க, இத கூட நீங்க மாத்திக்கலைன்னா எப்படி? எந்த தமிழால் வாழ்கிறீர்களோ, அந்த தமிழையே புதைத்து விடும் எண்ணம் கொடிது…. தமிழின் பெருமையோ நெடிது நெடிது…..

Advertisements

2 Responses to “தமிழ்! தமிழ்!”

 1. இத்யாதி July 18, 2008 at 6:58 am #

  தமிழில் பேசுவோம்… தமிழ் வளர்ப்போம்…
  உங்கள் பிள்ளையை பி.ஏ தமிழ் படிக்க வைக்க வேண்டாம்…
  அவர்களுக்கு தமிழில் பெயர் வைக்க உறுதி எடுப்போம்…
  என்னுடன் சேர்ந்து கொள்ளுங்கள் இந்த உறுதிக்கு…

  தமிழுக்கு என்ன காலமடா…. தமிழர் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் வைக்க சபதம் எடுக்க வேண்டியிருக்கிறது… 😦

 2. eswari October 24, 2008 at 6:04 am #

  sariyaaga sonneergal!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: