காதல் தங்களை அன்புடன் வரவேற்க்கிறது

12 Aug

நாம் பயணித்துக் கொண்டு தான் இருக்கிறோம் வாழ்க்கையில்…
இந்த பயணத்தில் சக பயணியாகத் தான் நீ வந்தாய்… ஆனால்
இன்றோ பயணமே உனக்காகத் தான்….

காலை முதல் இரவு வரை சலிக்காத பேச்சுகள்….
எந்த ஒரு எண்ணமும் எங்கோ எழும், ஆனால், முடியும் இடம் நீ! எப்படி?

சங்கிலித் தொடராய் குறுஞ்செய்திகள்….
ஒருவரைப் பற்றி ஒருவர் அறிந்து கொள்ள ஓராயிரம் கேள்விகள்…
இந்த நிமிடம் அப்படியே உறைந்து விடக்கூடாதா?
என ஒவ்வொரு நிமிடமும் ஏங்கும் இருவர் உள்ளம்…

நமது நட்பு வட்டத்திலிருந்து, ஒரு கோடானது.
உன்னையும் என்னையும் மட்டும் இணைக்கும் கோடாக…
அதுவும் ஒரு புள்ளியாக மாறிய போது தான் புரிந்தது நட்பின் எல்லை முடிவுற்றதென்று…

காதல் தங்களை அன்புடன் வரவேற்க்கிறது என்று வாசித்தபடி நான்…
திரும்பி பார்க்காமல் கண்ணீருடன் வந்த பாதையிலேயே மறுபடியும் உன் பயணம்!

இல்லை என்று ஒரு சொல் உண்டு….
இருக்கிறது என்று ஒரு சொல் உண்டு….
இதில் நீ எதை என்னிடம் உன் மெளனத்தால் நிரூபிக்க முயல்கிறாய்?

அன்பு என்று ஒரு உணர்வு உண்டு….
பிரிவு என்று ஒரு உணர்வு உண்டு….
கடை உணர்வில், முத்ற் உணர்வு மிகுதியான்து ஆச்சர்யமில்லையே!

எப்படி நானும் உன்னுடன் வந்து உன்னுடனான என் நினைவுகளை
பெற்ற இடத்திலேயே திரும்ப போட்டு விட்டு வருவது!

எப்படி பறித்த மலரை திரும்ப ஒட்ட வைத்து விட்டு போவது?
ஒரு மலர் மீதமானால் கூட வாசம் வந்த பாதையை நினைவுப்படுத்தாதா?

உன் நினைவாக என்னிடம் இருப்பதையெல்லாம் திருப்பிக் கேட்டாய்…
ஆனால் என் இதயத்தை மட்டும் என்னிடமே ஏன் வந்து சேர்த்தாய்…
என் இதயம் இப்போது கூட உன் நினைவில் தானே உறைந்து போயிருக்கிறது!

Advertisements

3 Responses to “காதல் தங்களை அன்புடன் வரவேற்க்கிறது”

 1. sanyasi August 26, 2009 at 11:23 am #

  மிகவும் அருமை நண்பா…

  மனமார்ந்த பாராட்டுக்கள்..

 2. Sateesh September 19, 2009 at 7:52 am #

  காலை முதல் இரவு வரை சலிக்காத பேச்சுகள்….
  எந்த ஒரு எண்ணமும் எங்கோ எழும், ஆனால், முடியும் இடம் நீ! எப்படி?

  இல்லை என்று ஒரு சொல் உண்டு….
  இருக்கிறது என்று ஒரு சொல் உண்டு….
  இதில் நீ எதை என்னிடம் உன் மெளனத்தால் நிரூபிக்க முயல்கிறாய்?

  நமது நட்பு வட்டத்திலிருந்து, ஒரு கோடானது.
  உன்னையும் என்னையும் மட்டும் இணைக்கும் கோடாக…
  அதுவும் ஒரு புள்ளியாக மாறிய போது தான் புரிந்தது நட்பின் எல்லை முடிவுற்றதென்று…

  Naan migaum rasiththadvai…

 3. shanmugam November 21, 2009 at 2:44 pm #

  best kavithai

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: