விண்ணை தாண்டி வருவாயா – சிறு பார்வை

1 Mar

ஒரு காதல், அந்த காதலின் வலி, யதார்த்தம், இளமையான நடிகர்கள், இனிமையான இசை, இது தான் விண்ணை தாண்டி வருவாயா? ஒரு நதியின் ஓட்டம் போல மெதுவாக செல்லும் திரைக்கதை. இடைவேளை வரை நடந்த கதையை ஹீரோ திருப்பி சொல்வதாய் ஆரம்பிக்கிறது படம். எல்லா படங்களில் வருவது போல தான் காதலில் விழுவது, பின்னாடியே சுற்றுவது என எல்லாம் போகிறது. அங்கங்கே சில காட்சியமைப்புகள் வாரணம் ஆயிரத்தை நினைவுப்படுத்தாமல் இல்லை. ஒரு காதலின் யதார்த்தமான ஓட்டத்தை மிக அழகாக சொல்லியிருக்கிறார் கௌதம். வாரணம் ஆயிரத்தில் வந்த காதல் ஒரு முன்னோட்டம் என்றால் இந்த காதல் முழு நீள படம். ஒரு காதலியின் மனதில் எழும் எண்ணங்களையும், சஞ்சலங்களையும், சில அழகான தருணங்களையும், மிக நேர்த்தியாக படைத்திருக்கிறார்.

ஹீரோ சினிமாவில் இயக்குனர் ஆவதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாய் சொல்லியிருக்கலாம். இன்னும் நிறைய திரைக்கதையின் அழுத்தங்கள் காணவில்லை, யதார்த்தம் காதலில் மட்டும் தான் இருந்தது. ஆங்காங்கே சிம்புவின் ஹீரோயிசம் வெளிப்படுவது மாதிரி தெரிகிறது. பாட்டிற்கு நடனங்கள் குறைவு, அப்படியே காட்சிகளாகவே நகர்கிறது. படத்தின் முடிவு சிறு தடுமாற்றத்தை ஏற்படுத்தும் போது நம்மை அறியாமலே நாம் அதிர்ச்சி ஆகிறோம். சிம்புவும், த்ரிஷாவும் பெரிய நடிகர்கள் என்பதை நாம் மறந்து விடுவது கௌதமுடைய இயக்கத்தின் வலிமை. ஏ ஆர் ரஹ்மான் நம்மையெல்லாம் தன இசையில் கட்டிபோட்டு மெய் மறக்க செய்து விட்டார்.

கண்டிப்பாக விண்ணை தாண்டி வர வேண்டுமா?

Advertisements

One Response to “விண்ணை தாண்டி வருவாயா – சிறு பார்வை”

  1. PRIYA March 9, 2010 at 7:05 am #

    VERY COOL LOVE. . .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: